தமிழ்

2013ஐ நோக்கி

tna_indiaபொய்கள் வெளிச்சத்துக்கு வந்து விட்டன

இலங்கை அரசின் பல்வேறு பொய்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. ‘மக்களைக் கொல்வது நமது நோக்கமில்லை. மக்களைப் புலிகளிடம் இருந்து காப்பாற்றும் மீட்சி யுத்தத்தை நாம் செய்கிறோம்.” என்பது போன்ற பல்வேறு பொய்களைப் பரப்பிவந்த இலங்கை அரச இயந்திரத்தின் வேடிக்கைக் கதைகள் ஓய்ந்து வருகின்றன. read more

தமிழ்

தமிழர்களின் வரலாற்றுக் கடமை

இந்தக் கட்டுரை மே 17 இயக்கத்தை சார்ந்தவரும் புதிய சோசலிச கட்சியின் நேற ளுழஉயைடளைவ யுடவநசயெவiஎந (ஊறுஐ-ஐனெயை) ஆதரவாளருமான ச.பாலாஜி யால் எழுதப்பட்டது. கூடன்குளம் அணுஉலை திட்டத்துக்கு எதிரான போராட்டம் பற்றிய பல பின்னனி விபரங்களை இக்கட்டுரை வழங்குகிறது. read more

No Picture
தமிழ்

இந்திய அணுசக்தி துறையின் சாராம்சம் : உங்கள் அழிவில் எங்கள் முன்னேற்றம்

இந்தக் கட்டுரை மே 17 இயக்கத்தை சார்ந்தவரும் New Socialist Alternative (CWI-India) இன்  நெருங்கிய நண்பருமான பா.அருண் காளி ராசாவால் எழுதப்பட்டது. கூடங்குளம் அணு உலை சம்மந்தமான சர்ச்சையை பற்றிய பல உண்மைகளை வெளிச்சர்த்திர்க்கு கொண்டு வரும் கட்டுரை. read more

No Picture
தமிழ்

எரியும் மத்திய கிழக்கும் வடஆபிரிக்காவும்

சேனன்-

-புரட்சியும் -மார்க்சியரும்-

05-02-2011 அன்று “விக்கஸ், மார்க்சியர் மற்றும் எகிப்திய விளைவு” என்ற தலைப்பில் உலகின் முன்னணி வலதுசாரியப் பத்திரிகையான பினான்சியல் டைம்ஸில் (Financial Times) எட்வர்ட் கடாஸ் (Edward Hadas) என்பவர் ஒரு சிறு கட்டுரை எழுதியிருந்தார். ஒரு சதத்துக்கும் உதவாத அக்கட்டுரை வலதுசாரிய சிந்தனைப்போக்கின் -அதாவது அதிகார மையத்தின் பார்வையில் -ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றிய எடுத்துக் காட்டுக்கு ஒரு சிறு உதாரணம். இக்கட்டுரை சமூகத்தைப் புரிந்து கொள்ள அவர்கள் எதிர்கொள்ளும் குழப்பத்தை மிக்க குழப்பத்துடன் முன்வைக்கிறது. சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள இருக்கும் வழிகளில் மார்க்சியம் மிக முக்கியமான வழிமுறைகளை முன்வைக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் இக்கட்டுரையாசிரியர் தனக்கு விருப்பமான முறையாக ஒரு முறையை முன்வைக்கிறார். ‘திறந்த பொருளாதாரம் வளரலாம் அல்லது வளராமலும் விடலாம்- அதை அங்கு சம்மந்தப்பட்ட நாட்டுக்குள் போய்த்தான் பார்க்கவேண்டும்’ என்ற அடிப்படையில் அவர் ‘முறை’ விரிகிறது. திறந்த பொருளாதாரத்தை முன்வைத்து அதன் வளர்ச்சியை ஒட்டி வரலாற்றைப் புரிந்து கொண்டு-அது சார்ந்து வரலாற்றை இயக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கில் அவர் வாதம் விரிவடைவதை ஊகித்துக்கொள்வது சிரமமல்ல- அதாவது அதிகாரத்தின் பொருளாதார நலனுக்காக தாம் எதுவும் செய்யலாம் என்பதைச் சாரம்சமாகக் கொண்டதாக அவரது ‘முறை’ சுருங்குகிறது. சமகால வரலாற்று நிகழ்வுகளை விளக்க இவர்களிடம் எந்த ‘முறை’களும் இல்லை என்பதைச் சொல்லி அதற்காக மார்க்சியத்தைத் துணைக்கழைத்து, பின் அதைத் திட்டித் தீர்க்கும் இவர்களது போக்கு மிக வேடிக்கையானது. ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகள் கூட இன்று  போராட்டத்தின் தத்துவமான மார்க்சியத்தைப் பற்றிப் பரவலாகப் பேசத் தொடங்கியிருப்பது நாம் ஒரு புதிய போராட்ட சகாப்தத்தில் நுழைந்திருப்பதை மீண்டும் சுட்டி நிற்கிறது. read more