இந்தக் கட்டுரை மே 17 இயக்கத்தை சார்ந்தவரும் New Socialist Alternative (CWI-India) இன் நெருங்கிய நண்பருமான பா.அருண் காளி ராசாவால் எழுதப்பட்டது. கூடங்குளம் அணு உலை சம்மந்தமான சர்ச்சையை பற்றிய பல உண்மைகளை வெளிச்சர்த்திர்க்கு கொண்டு வரும் கட்டுரை.
கூடன்குள அணு உலை திட்டத்தை செயல் படுத்த துடிக்கும் ஆளும் வர்க்கம் நாட்டின் வளர்ச்சி, அணு உலை பாதுகாப்பு என்று பல பொய்களை மக்கள் நடுவில் பரப்பி வருகிறது. இவர்கள் யாருமே இது வரை அணு உலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பற்றி சிறிதும் கூட பேசுவதில்லை. பன்நாட்டு நிறுவங்களின் லாபத்திற்காகவே அணு உலை திட்டங்களை செயல் படுத்த இந்திய ஆளும் வர்க்கம் முயல்கிறது. இந்த கட்டுரை சுட்டிக் காட்டுவதை போல பொதுஉடைமை சமூகத்தில் மட்டுமே சனநாயக ரீதியில் மனித சமூகம் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் முன்னேற இயலும்.
இந்திய அணுசக்தி துறையின் சாராம்சம் : உங்கள் அழிவில் எங்கள் முன்னேற்றம்
சூன் 2011 , புகுஷிமா அணு உலை விபத்தால் ஏற்பட்ட அணுக கதிர்வீச்சைக் கட்டுப் படுத்த ஜப்பான் திணறிக் கொண்டிருந்த காலம். ஜெர்மனியில் உள்ள போன் நகரில் உலக பருவநிலை மாநாடு நடை பெற்றது. அதில் பங்கேற்ற இந்தியா, சூன் 14 அன்று அணு சக்தித் துறையை சுற்றுச்சூழலை மாசு படுத்தாத தூய்மையான துறையாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தது. உலக நாடுகளிலெல்லாம் அணு சக்திக்கு எதிராக கருத்தாக்கம் உருவாகிக் கொண்டிருந்த நாட்களில் இந்தியா இப்படி ஒரு தீர்மாத்தை முன் வைத்தது கேலிக்கு உள்ளானது. Climate Action Network என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அளிக்கும் பகடி விருதான “Fossil of the day ” விருது இந்தியாவுக்கு வழங்கப் பட்டது. உலகத்தில் நிலவும் நிதர்சன சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல், ஏகதிபத்திய வேட்கையுடன் செயல் படும் இந்தியா ஆளும் வர்கத்தின் மனோ நிலையின் வெளிப்பாடாக தான் அந்த தீர்மானத்தை கொள்ள வேண்டும். ஜெர்மானி, இத்தாலி, சுவித்சர்லாண்டு போன்ற ஐரோப்பிய நாடுகெல்லாம் அணு உலய்களை மூட தீர்மானிக்கும் இந்த காலகட்டத்தில் தான் கூடங்குளம், ஜைத்தாபூர் போன்ற இடங்களில் எல்லாம் இந்தய அணு உலைகளை நிறுவ முயற்சிக்கிறது.
அலட்சியத்தால் ஏற்படும் பேரவலங்கள்!!
போபால் விஷ வாயு தாக்குதலின் 25 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு உரையாற்றிய மன்மோகன் சிங் “அலட்சியத்தால் ஏற்பட்ட அந்த பேரவலம் நம் அனைவரின் மனசாட்சியையும் இன்னும் புண் படுத்திக் கொண்டு தான் இருக்கிறது ” என்று கூறினார். இப்போது கூடங்குளத்தில் நிகழும் போராட்டங்களை அலட்சியப் படுத்தி இன்னொரு பேரவலத்தை நிகழ்த்த இந்திய அரசு முனைப்போடு செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.
1974 போக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பிறகு அமேரிக்கா தாராப்பூர் அணு உலைக்கு கொடுத்துக் கொண்டிருந்த யுரனித்தை கொடுக்க மறுத்தது. இந்தியா சோவித் அரசின் உதவியை நாடியது. அதன் விளைவால் 1979 ஆம் ஆண்டு கூடன்குளத்தில் அணு உலை அமைக்க பேச்சு வார்த்தை நடந்தது. 1988 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ராசீவ் காந்திக்கும் கோபர்ஷேவிர்க்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.
இந்த அணு உலையால் பாதிக்கப் படும் மூன்று மாவட்டங்களில் தான் தமிழ்நாட்டின் 70 % மீன் வளம் உள்ளது. இதனால் அங்குள்ள மீனவர் சமுதாயம் 1989 ஆம் ஆண்டு ஒரு பெரும் போராட்டத்தை நடத்தியது. 10000 பேர் கலந்து கொண்ட அந்த போராட்டம் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. ஒருவர் பலியானார்.
சோவித் ஒன்றியம் சிதறுண்ட நிகழ்வு இந்த திட்டத்திற்கு ஒரு முட்டுக் கட்டையாக அமைந்தது. 1997 ஆம் வருடம் பிரதமராக இருந்த தேவே கௌடா ரஷ்யாவிற்கு அரசு முறை பயணம் சென்றார். மறுபடியும் அணு உலைப் பற்றி பேச்சு வார்த்தை நடந்தது. இன்னொரு உடன்படிக்கை கையெழுத்தானது. அணு உலை தவிர பல பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு ஆயுதம் வாங்கவும் இந்தியா ஒப்பந்தம் செய்தது.
Nuclear Power Corporation Of India Limited (NPCIL ) 929 ஹெக்டேர் நிலங்களை அணு உலைக்காக கையகப் படுத்தியது. வாழ்க்கைத் தரம் உயரும், நிரந்தர வேலை கிடைக்கும் என்று மக்களுக்கு வாக்களித்தது. இவை அனைத்தும் நிறைவேறப் போவதில்லை என்று கூடிய சீக்கிரமே மக்கள் உணர்ந்தனர். 2001 ஆம் ஆண்டு People’s Movements Against Nuclear Energy என்ற கொடியின் கீழ் மக்கள் ஒன்றிணைந்தனர்.
இன்று வரை அந்தப் போராட்டம் நடைபெறுகிறது. மக்களின் குறைகளை கண்டறிய மும்முறை கூட்டங்கள் ஏற்பாடு செய்யப் பட்டு எந்த ஒரு முடிவும் எட்டாமல், “குறைகள் தீர்க்கப் பட்டாகி விட்டது” என்று தன்னிச்சையாக அரசு அறிவித்தது. இந்தியா அரசிடம் ஞாயத்தை எதிர் பார்த்து ஏமாந்து போன மக்கள் உண்ணா விரதப் போராட்டத்தை தொடங்கினார்கள். 127 பேரின் சாகும் வரை உண்ணா விரதம் இன்று வரை இன்று வரை தொடர்கிறது.
தமிழக சட்ட மன்றத்தில், முதல்வர் ஜெயலலிதா “மதிய அரசு மக்களின் அச்சத்தை போக்கும் வரை கூடன்குள அணு உலை இயக்கத்தை தொடங்கக் கூடாது” என்று தீர்மானம் நிறை வேற்றினார். “அச்சத்தை போக்கும் அவசியம் இங்கில்லை. அணு உலை மூடும் வரை போராட்டம் தொடரும்” என்று மக்கள் தங்களின் போராட்டத்தை தொடர்கிறார்கள்.
மக்களின் ஞாயமான கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல இயலாமல், அந்நிய நாடு சதி, கிறிஸ்துவ சதி என்று மதிய அரசு பிரச்சனையை திசை திருப்ப முயல்கிறது. உலக மீனவர் தினத்தன்று அணு உலை அருகில் உள்ள கடல் பகுதியில் 10,000 மீனவர்கள் கறுப்புக் கொடியுடன் படகில் சென்று ஆர்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது 121, 153(A),143,124(A),447 ஆகிய குற்றவியல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. “இந்திய அரசின் மீது போர் தொடுபவர்கள் மீதும், போர் தொடுக்க முயற்சிப்பவர்கள்” மீதும் பொருந்தக் கூடியது குற்றவியல் பிரிவு 121 . காடுகளில் நடக்கும் போர் இன்று கடற்கரை வரை வந்து விட்டது.!!!
இந்தியாவில் அணுசக்தித் துரையின் பாதுகாப்பு !!!
கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக பேசி வருபவர்கள், இந்தியாவில் உள்ள அணு சக்தி சார்ந்த துறைகளில் இத்தனை ஆண்டுகளை எந்த ஒரு விபத்தும் நடை பெறவே இல்லை என்றும் , இந்தியாவில் அணு சக்தி துறை பாதுகாப்பான சூழலில் தான் செயல் படுகிறது என்று தொடர்ந்து ஒரு பொய்யை திட்டமிட்டு பரப்பிக் கொண்டே வருகின்றனர். இவர்கள் கூறுவது போல அணு உலை என்பது எழிமையாக கையாளப் படக் கூடிய கருவி அல்ல. நடக்கும் ஒரு சிறு தவறு கூட ஒட்டு மொத்த அணு உலையின் செயல் பாட்டையும் பாதித்து பேராபத்தை ஏற்படத்தவல்லது. ஒவ்வொரு விபத்திலும் ஒவ்வொரு விதத்தில் விபத்து நடை பெறுகிறது. எல்லா வித பாதுகாப்புடனும் கட்டப் பட்ட புகுஷிமா அணு உலையில் நடந்த விபத்து அதற்க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ரஷ்ய நாடு விஞ்ஞானிகள் தங்கள் நாட்டு அணு உலையின் பாதுகாப்பு பற்றிய அறிக்கை ஒன்றை தங்கள் நாடு சனாதிபதியிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. ரஷ்ய நாடு அணு உலைகளின் உள்ள முப்பதி ஒன்று குறைபாடுகளை அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியது. இந்த அறிக்கையை நோர்வே நாட்டு ஊடகங்கள் வெளி இட்டன. இப்படி அறிக்கைகள் வெளி ஆன பின்பும் இந்தியா ஆளும் வர்க்கம் ரஷ்ய அணு உலை பாதுகாப்பானது என்று போது மக்களிடம் கூறி வருகின்றனர்.
இந்தியாவின் அணு சக்தி வரலாறின் பக்கங்கள் நிர்வாகக் குறைபாடுகளாலும், தேசத்தின் பாதுக்காப்பு என்ற பெயரில் ரகசியகங்களாலும், அணு உலை அரிகே வாழ்வோரின் சோகக் கதைகலாலுமே நிரப்பப் பட்டிருக்கிறது. அணு சக்தி சட்டம், 1962 ஆம் ஆண்டு இந்தியா நாடாளு மன்றத்தில் விவாததிற்கு எடுத்துக் கொல்லப் பட்ட போது அணு சக்தி துறைக்கு வழங்கப் பட்ட ரகசிய காப்பிற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. விவாதத்தின் போது கிருஷ்ண மூர்த்தி ராவ் என்ற உறுப்பினர் நேருவிடம் “இந்த சட்டம் படைத் துறை சாராத அணு சக்தி பயன் பாட்டிற்கும் பொருந்துமா?” என்று கேட்டதற்கு “அவை இரண்டையும் எப்படி வேறு படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை” என்று அன்றைய பிரதமர் நேரு பதிலளித்தார். இன்றளவும் அணு சக்தி துறையின் ரகசியத் தன்மை பாதுகாக்கப் படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் எந்த ஒரு தகவலையும் அணு சக்தி துறை மூலமாக நாம் பெற இயலாது.
2003 சனவரி 21 ஆம் தேடி அன்று கூடல்களும் அணு உலையில் நடை பெற்ற விபத்து பற்றிய தகவல்களை அவுட்லுக் இதழ் வழிக் கொண்டு வந்தது. ஆறு ஊழியர்கள் சக்தி வாய்ந்த அணு கதிர் வீச்சிற்கு உள்ளாகி உள்ளனர். இந்த சம்பவத்தை பற்றி அறிக்கை வெளியிட்ட BARC அமைப்பின் தலைவர் கே. பட்டாசார்ஜி இந்தியா அணு சக்தி வலராற்றில் இது ஒரு மோசமான விபத்து என்று கூறினார். அனால் இதைக் காட்டிலும் அன்றாடம் அணு உலைகளுக்கு அருகில் வாழும் மக்கள் அதிக கதிர் வீச்சை உட்கொண்டு கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
Doctors Of Safe Environment (DOSE) என்ற அமைப்பை சேர்ந்த மருத்துவர் புகழேந்தி கூடங்குளம் பகுதியில் பல கள ஆய்வுகளை நடத்தியுள்ளார்.
2003 இல் அவர் வெளியிட்ட கள ஆய்வறிக்கை கல்பாக்கம் அணு உலை சுற்றிய பகுதியில் கணிசமான அளவு மக்கள் எலும்பு மஞ்சை புற்று நோய் என்ற புற்று நோயால் பாதிக்கப் பட்டுள்ளது தெரிய வந்தது. இதைப்பற்றி மேலும் ஆய்வு நடத்த கூடங்குளம் அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்ட போது மறுக்கப் பட்டுள்ளது.
2008 இல் அவர் நடத்திய ஆய்வில் கூடன் குளத்தில் மீன் பிடி தொழிலில் ஈடு பட்டுள்ள பெண்களில் பலர்க்கு “Auto Immue thyroditis” எனப்படும் கதிர் வீச்சால் தைராயிடு சுரப்பிகளை பாதிக்கப் படும் நோய் இருப்பது கண்டறியப் பட்டது.
2004 சுனாமிக்கு பிறகு அணு கதிர் வீச்சின் அளவு அதிகரித்துள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
கருவுற்றிருக்கும் பெண்கள் கதிர் வீச்சை உட்கொள்ளும் போது பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றான Polydactyl எனப் படும் உடலமைப்பு சீரின்மை பாதிப்பு அங்கு பல குழந்தைகளிடம் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாடுகோடா என்ற இடத்தில் 1967 முதல் யுரேனியும் தாதுப் பொருள் வெட்டி எடுக்கப் படுகிறது. Indian Doctors for Peace and Development என்ற தொண்டு நிறுவனம் 2007 ஆம் ஆண்டு அங்குள்ள யுரேனியும் சுரங்கங்களை சுற்றி உள்ள கிராமங்களில் கள ஆய்வு நடத்தியது. ஆண்டு தோறும் பிறக்கும் குழந்தைகளில் 9.5 % குழந்தைகள் மோசமான உடலயமிப்பு குறைபாடுகளுடன் பிறந்து இறக்கின்றனர். குழந்தையின்மை குறைகளும் அந்த பகுதியில் அதிமாக உள்ளதாக கண்டரியப் பட்டுள்ளது. இவற்றை மயமாக கொண்டு “Buddha weeps in Jadugoda” என்ற ஆவணப் படம் எடுக்கப் பட்டது.
தெஹல்கா கட்டுரை (செப்டம்பர் 25,2010) பாதுகாப்பு விதிகள்அணுசக்தி ஸ்தாபனத்தில் கடைபிடிக்கப்படும் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. தொழிலாளர்களுக்கு சரியான தலைக்கவசங்கள் மற்றும் சுவாசமுகமூடிகள் வழங்கப்படுவது இல்லை. கதிரியக்கப் பகுதிகள் முள்வேலி தடுப்புகள் இல்லாமல், எந்த ஒரு அறிவிப்பு பலகைகளும் இல்லாமல் காணப் பட்டது. கதிர்வீசுடைய கழிவு நீர் குடி நீருடன் கலந்து மக்கள் அதை உட்கொள்ளும் அவலத்தையும் அந்த கட்டுரை வெளிக்கொண்டு வந்தது. யுரேனிய தாது ஏற்றி செல்லும் லாரிகள் செரியாக மூடப் படாமல் கதிரியக்க தூசி காற்றில் பறக்கும் வண்ணம் இயங்கிக் கொண்டு இருந்தது.
தட்டுப்பாட்டிற்கான சோசியலிச தீர்வு
சுற்றுச்சூழலுக்கும் மனித சமுதயதிற்கும் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்ட பிறகும் கூட மின்சக்தி பற்றாக்குறையை எப்படி தீர்ப்பது என்ற கேள்வி பதிலளிக்கப் பட வேண்டும். மின்சக்தியை திறன்மிக்க வகையில் பயன் படுத்தும் தொழில் நுட்பங்கள், புதிபிக்ககூடிய ஆதாரங்களில் இருந்து மின் உற்பத்தி செய்யும் முறைகள், மின்சாரம் கடத்தப் படும் போது ஏற்படும் இழப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் கண்டிப்பா மின் தட்டுப் பாட்டை குறைக்க உதவும். அனால் லாபதயே மையமாக கொண்டு இயங்கும் முதளிளிதுவ கட்டமைப்பில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்வது சாத்தியமா என்பதை நான் ஆராய வேண்டும்.
உலக வரலாற்றில் எப்போது இல்லாத அளவு சுற்றுச்சூழல் பாதிப்பு முதலாளித்துவ சமூக அமைப்பில் தான் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதற்கு சமூக உற்பத்தியில் உள்ள ஒழுங்கின்மையே காரணம். லாப நோக்கில் செயல் படும் நிறுவங்கள் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை முதலாளித்துவ கட்டமைப்பை அழிக்காமல் நாம் தடுத்து நிறுத்த முடியாது. எண்ணெய் வளங்களை கைப்பற்ற வெவ்வேறு நாடுகளுக்கிடையே யுத்தங்கள் நடைபெறுமே அல்லாமல் ஆக்கப் பூர்வமான முன்னேற்றம் மின்சக்தி துறையில் ஏற்ப்படாது.
சுற்றுச் சூழல் மற்றும் மனித சமூகத்தை பதிக்காத மின்சக்தி துறை உருவாக்குவதற்கான போராட்டம் முதலாளித்துவதிற்கு எதிரான போராட்டமாக அமையாமல் இருக்க இயலாது. ராபர்ட் நியுமன் என்ற அமெரிக்க சமூக ஆர்வலர் கூறுவதைப் போல “முதலாளித்துவம் அல்லது தூய்மையான சுற்றுச் சூழல். ஒரே சமயத்தில் இந்த இரண்டில் ஒன்று தான் இருக்க முடியும்”
I really coudln’t ask for more from this article.